Why Iceland is Greeny?

![]() |
Desert Rose |
தாவரவியல் பெயர் : "அடினியம் ஒபிஸம்" (Adenium Obisum)
வேறு பெயர்கள் : "சபி ஸ்டார்" (Sabi Star), "மாக் அசலீ" (Mock Asalea), "இம்பாலா லில்லி" (Imbala Lily).
குறைவான மழையைப் பெறும் வறண்டு போன பகுதியே பாலைவனங்கள். ஆனால், ஆப்பிரிக்க பாலைவனங்களில் பாலைவன ரோஜா என்ற இந்த செடி வளர்கிறது. இது "அபோசைனாசியே" (Apocynacea) குடும்பத்தை சேர்ந்த பூக்கும் தாவரம். இதன் தண்டு பகுதி ஒன்றுடன் ஒன்று இணைந்து முறுக்கியபடி காணப்படும். தடிமனான அடிப்பகுதியும், வேர்களும் நீரை அதிகம் எடுத்துக் கொள்வதில்லை. வறண்ட, தரிசன பகுதிகளிலும் இவை செழிப்பாக வளர இதுவே காரணம்.
மிக மெதுவாக வளரும் இந்த செடி மூன்று மீட்டர் உயரம் வரை வளர்கிறது. இவை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரை அழியாமல் பசுமையுடன் இருக்கும். இந்த செடியில் இருந்து வெளிவரும் பால், செடியின் வேர், விதை போன்றவை நச்சுத்தன்மை உடையவை.
![]() |
Desert Rose |
செடியின் பூக்கள் இளஞ்சிவப்பு, அடர்த்தியான சிவப்பு நிறங்களில் மிகவும் அழகாக இருக்கும். ரோஜா மலரைப் போலவே பூவின் இதழ்கள் அமைந்திருக்கும். ஒரே செடியில் ஏராளமான பூக்கள் பூக்கும். பதியன் இடுவதன் மூலம் இவை இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. சஹாரா, அரேபியா பாலைவனப் பகுதிகளில் இந்தச் செடிகள் அதிகம் காணப்படுகின்றன.
முற்காலத்தில், இந்த செடியின் விதைகளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் விஷம், அம்புகளின் முனையில் தடவி, விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டது. ஒட்டகங்கள் போன்ற பாலைவன விலகினங்களின் உடலில் உள்ள உண்ணி, பேன் போன்றவைகளைக் கொல்லும் மருந்தாகவும், இந்தச் செடியின் சாறு பயன்படுகிறது.
இந்தச் செடி வீட்டுத் தொட்டிகளிலும் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இந்தச் செடிக்கு வாரம் ஒரு முறை சிறிதளவு நீர் ஊற்றினாலே போதுமானது. மிகக் குறைந்த அளவு தண்ணீரும், அதிக சூரிய வெளிச்சமும் தேவைப்படுகிற செடி இது.
Comments
Post a Comment
Thanks for visiting my site.